Home இலங்கைபொட்டு அம்மான் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை – கோத்தாபாய

பொட்டு அம்மான் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை – கோத்தாபாய

by admin

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்   ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியின் போது இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லையெனவும் அதன் காரணமாகவே அவர் உயிருடன் இருப்பதாக  தெரிவிக்கப்பட்டு வருவதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மான் உயிரிழந்தமையினை படையினர் உறுதி செய்ததாக தெரிவித்த அவர்  பொட்டு அம்மான் உயிருடன் இருந்தால் தற்போது அவர் வெளியில் வந்திருக்க வேண்டும் எனவும் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More