Home இலங்கைஜெயந்தன் படையணி உறுப்பினர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

ஜெயந்தன் படையணி உறுப்பினர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

by admin


தமிழீழ விடுதலைப் புலிகளின், ஜெயந்தன் படையணி உறுப்பினர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜெயந்தன் படையணியிலிருந்து தப்பிச்சென்று, தென்னிந்தியாவில் தலைமறைவாகி வாழ்ந்தவர்களில் சிலர் மீண்டும் இலங்கைக்குள்; வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனைத் தொடந்தே இந்தத் தேடுதல் நடவடிக்கை ஆரம்கிகப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜெயந்தன் படையணியைச் சேர்ந்தவர்களில் சிலர் மட்டக்களப்பு, ஏறாவூர் காவல்துறைப் பிரிவிலேயே, நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் அப்பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்கள் மற்றும் புதிய நபர்கள் தென்பட்டால், தகவல் வழங்குமாறு புலனாய்வுத்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More