169
மீதொட்டுமுல்ல சம்பவம் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
முதல் தடவையாக இலங்கையில் இவ்வாறு குப்பைகளினால் பாரிய அனர்த்தம் ஒன்று ஏற்பட்டு உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அடுத்த வாரமளவில் பாராளுமன்றை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர் மீதொட்டுமுல்ல சம்பவமானது ஒர் மனித உரிமை மீறல் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love