164
சிரியாவில் குர்து படைகள் மீது துருக்கி மேற்கொண்ட வான்தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிரிய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மேறடகொள்ளப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குர்து படையைச் சேர்ந்தவர்கள் எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குர்து படையினர் துருக்கியில் குண்டு வெடிப்புக்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதற்கு பதிலடியாக துருக்கி தொடர்ந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது
Spread the love