219
இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதி, அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 24 ஆவது நினைவு தின நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள ரணசிங்க பிரேமதாஸவின் உருவச்சிலை முன்றலில் இன்று நடைபெற்றது.
பௌத்த மதகுருமார்களின் வழிபாட்டுடன் ஆரம்பமான நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி பௌத்த மதகுருமார்களுக்கு காணிக்கைகளை வழங்கியதுடன் பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் பௌத்த மதகுருமார்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய சஜித் பிதேரமதாஸ, ஹேமா பிரேமதாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
Spread the love