கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினால், மாவட்டத்தின் சமூகசேவை செயற்பாடுகளுக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் தொடக்கம் இந்த வருடம் 2017 ஆம் ஆண்டு 04 ஆம் மாதம் வரையிலான காலப்பகுதியில் மட்டும் 4 இலட்சத்து 86 ஆயிரத்து 200 ரூபா நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டுக்கான நிதியுதவி, பாடசாலை விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளுக்கான நிதியுதவி, உள்ளுர் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொள்ளும் முகமாக வெளிநாடு செல்வதற்கான அன்பளிப்பு நிதி, மருத்துவ சேவைக்கான நிதியுதவி, அனர்த்தங்களுக்கான நிதியுதவி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார நிகழ்வுகளுக்கான அன்பளிப்பு நிதி என குறித்த நிதிகள், சங்க கூட்டத்தின் தீர்மானங்களுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்டத்தின் சமூகசேவை செயற்பாடுகளில் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் அக்கறை செலுத்தி அதனை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும், கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன் மேலும் தெரிவித்தார்.