Home இந்தியாதொழில் அதிபர் விஜய்மல்லையா விரைவில் இந்தியா கொண்டு வரப்படவுள்ளார்.

தொழில் அதிபர் விஜய்மல்லையா விரைவில் இந்தியா கொண்டு வரப்படவுள்ளார்.

by admin


இங்கிலாந்து அதிகாரிகளுடான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து லண்டனில் இருந்து தொழில் அதிபர்  விஜய்மல்லையா விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

விஜய் மல்லையர் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்த 9 ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் லண்டனில் தங்கியுள்ள நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய  மத்திய அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில் விஜய்மல்லையாவை கடந்த 18ம்திகதி ஸ்கொட்லாந்து யார்டு போலீஸ் கைது செய்து பின்னர்  ஜாமீனில் விடுதலை செய்தது. இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த இங்கிலாந்து அதிகாரிகள் குழுவினருடன் உள்துறை செயலாளர் ராஜீவ் மெகரிஷி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும்  அதன்படி அவர் விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More