174
தன்சானியாவில் பாடசாலை பேரூந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 36பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று சனிக்கிழமை ஆரம்பபாடசாலை மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக சென்று கொண்டிருந்த வேளையிலேயே பேரூந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, 33 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பேரூந்து சாரதி என 36பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த மாணவர்கள் 12-13 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Spread the love