சித்தசுயாதீனம் அற்றவர்களே வெசாக் பௌர்ணமி தினத்தில் கறுப்பு கொடி ஏற்றுவார்கள் என நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் வெசாக் பௌர்ணமி தினத்தில் கறுப்பு கொடியை ஏற்ற எத்தனிப்போர் துரோகிகளாகவும், சித்த சுயாதீனமற்றவர்களாகவுமே நோக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பை வெளியிட்டு கறுப்புக் கொடி போராட்டமொன்றை நடத்துமாறு ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச அண்மையில் கோரியிருந்தார். இதேவிதமான கருத்தினை பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.