Home உலகம்பாகிஸ்தானில் 4 தலிபான் தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்:-

பாகிஸ்தானில் 4 தலிபான் தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்:-

by admin

பாகிஸ்தானில் மேலும் 4 தலிபான் தீவிரவாதிகள் நேற்று தூக்கிலிடப்பட்டுள்ளனர். அப்பாவி மக்களைக் கொன்றது, மசூதி மீது தாக்குதல் நடத்தியது, பாதுகாப்பு படைகளைத் தாக்கியது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களே தூக்கிலிடப்பட்டதாக இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூக்கில் இடப்பட்டவர்கள் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை எந்த சிறையில் தூக்கிலிடப்பட்டனர் எங்கு விசாரணை நடந்தது?, எப்போது மரண தண்டனை விதிக் கப்பட்டது? போன்ற விவரங்கள் வெளியிடவில்லை.

பெஷாவர் தாக்குதலுக்கு பின்னர் 441 பேரை பாகிஸ்தான் தூக்கிலிட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More