சீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமது நாட்டு நீர் மூழ்கிக் கப்பல் ஒன்று இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு சீனா கோரியுள்ள போதும் இந்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாதத்தில் குறித்த நீர் மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு கோரப்பட்டிருந்தது. கடந்த 2014ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இலங்கைக்குள் சீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பிரவேசித்திருந்ததன் பின்னர் இலங்கைக்குள் சீன நீர்மூழ்கிக் கப்பல் பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை. சீன நீர் மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கைக்கு வந்துள்ள நிலையில் நீர் மூழ்கிக் கப்பல்களை இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு கோரியதாகவும் அதற்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.