மேற்படிக் கண்காட்சி இம்மாதம்; 12, 13 ஆம் திகதிகளில (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) 30, பழையவாடிவீட்டு வீதி எனும் விலாசத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக பெண்களின் உரிமைகளுக்காகத் தனியாகவும் கூட்டாகவும் குரல் கொடுத்தவர்களில் சிலர் சேர்ந்து எங்களுக்குள் சுயசிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தவும், அந்தச் சிந்தனை மாற்றங்களைச் செயற்படுத்தவும் சமதை என்ற தளத்தினை 11.05.2014 அன்று ஆரம்பித்தோம்.
இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட சமதை எனும் எமது தளம் ‘பால், சாதி, இன, மத, வர்க்க அடிப்படையில் மனிதரை வேற்றுமைப்படுத்தாத, பெண்நிலைவாதச் சிந்தனை அடிப்படையிலான, தத்தம் கலைப்பண்பாட்டு வடிவங்களை சமத்துவ நோக்கில் மீளுருவாக்கிப் பேணுகின்ற, சுய சிந்தனையும் சுய சார்பும் சுய மரியாதையும் உடைய, இயற்கையைப் பாதிக்காத, சமத்துவமான ஓரு சமூக வாழ்தலை உருவாக்குவதை கணவாகக் கொண்டு நகர்கின்றது.
இன்றைய உலகமயமாக்கற் சூழலில் பல்தேசியக் கம்பனிகளின் வருகையும், வர்த்தகமயமாதலும் இயற்கையுடன் இயைந்து, கூட்டுச் சமூகமாக வாழ்ந்து வந்த மக்களைத் தனியன்களாக மாற்றியுள்ளது. மேலும் இயற்கையைக் கட்டுப்படுத்தி அடக்கி ஆழுகின்றதும், இயற்கைக்கு விரோதமான வாழ்க்கையை வாழுகின்றதுமான மனித சமூகங்களை உருவாக்கித் தந்துள்ளது. குறிப்பாக உலகமயமாதலின் வருகைக்கு முன்னர் ஆண்களில் மட்டும் தங்கி வாழ்ந்த பெண்கள் தற்போது ஆண்களால் நிர்வகிக்கப்படும் பல்தேசியக் கம்பனிகளிலும்; தங்கி வாழ்பவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
ஆனால் எமது பிரதேசங்களில் சில காலத்துக்கு முன்பிருந்த மக்கள் தாங்களே தங்களுக்குத் தேவையான விடயங்கள் பலவற்றையும் உற்பத்தி செய்து தன்னிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவர்களாகக் காணப்பட்டனர். இவ் உற்பத்திகள் பெரும்பாலும் உள்ள10ர் மூலப்பொருட்களைக் கொண்டு உள்ள10ரவரால் உற்பத்தி செய்யப்பட்டு உள்ள10ரவரால் பாவிக்கப்பட்டு வந்ததால் எமக்கான ஒரு சுயாதீன வாழ்வும் இருந்தது. இங்கு நாங்கள் உற்பத்தி செய்த பொருட்கள் சார்ந்த ரசனை, அழகியல், போன்றவையும் வளர்ந்தது.
குறிப்பாக நமது பெண்கள் இயற்கையுடன் இணைந்த சுய உற்பத்திகளை மேற்கொள்பவர்களாக (உ-ம்:- பன்பாய், மட்பாண்டங்கள், நெசவுற்பத்திகள் போன்ற) இருந்த காரணத்தினால் பொருளாதாரச் சுரண்டல் குறைவாகவும் உள்ள10ர் உற்பத்திகளை ஊக்குவிப்பவர்களாகவும் விளங்கினர். இதனால் பெண்கள் தங்களுக்கான சுயத்துடன் பிறரில் தங்கி வாழாமல் கூட்டாகச் சேர்ந்தியங்கும் தன்னிறைவானவர்களாகத் திகழ்ந்தனர். வாங்கி விற்கும் சந்தைப் பொருளாதாரம் எங்களை ஆக்கிரமித்ததன் பின்னர் எங்களது உற்பத்திகள் மீதான எங்களது விருப்புக்கள் அக்கறைகள் குறைக்கப்பட்டு இறக்குமதியாகும் விடயங்களே சிறப்பானவை எனும் மாயை எம்மத்தியில் உருவாக்கப்பட்டு விட்டது.
சுயசார்பான தொழில்கள் மற்றும் கலைகள் பலவற்றை பாரம்பரியமாகக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள் எங்களை (பெண்களை) எவ்வாறு வலுப்படுத்தப்போகின்றோம்? எனும் கேள்வியை எழுப்பவும், இறக்குமதியாகும் பொருட்களிலிருக்கும் மாயையை மாற்றவும் சிந்தனைகளில் மாத்திரமன்று செயற்பாடுகளுக்கூடாகவும் வலுவடைவோம் எனும் நோக்கிலும் சமதை சகோதரிகள் சில செயற்பாடுகளை குறிப்பாக எமது சொந்த வாழ்வு சார்ந்து முன்னெடுத்து வந்துள்ளோம்.
இந்தக் கண்காட்சியானது பிளாஸ்ரிக் பொருட்களாலான அலங்காரப்பொருட்கள், பரிசுப் பொருட்கள் பைகள் போன்றவற்றுக்கு மாற்றாக நாம் எமது உள்ள10ர் வளங்களைக் கொண்டு தயாரிக்கக் கூடிய அலங்காரப்பொருட்கள் சிலவற்றைக்காட்சிப்படுத்துகின்றது. உள்ள10ர் வளங்களைப் பயன்படுத்தி எங்களுக்குத் தேவையானவற்றை எங்களின் சூழலிலிருந்தே பெற்றுக்கொள்ளமுடியும் என்பதனை வலியுறுத்தும் வகையில் ‘விரல்களில் விளைந்தது’ எனும் கண்காட்சியை ஒரு சிறு முன்னுதாரணமாகவும், முன்னெடுப்பாகவும் வடிவமைத்துள்ளோம்.
‘எங்களுடைய எதிர்காலச் சந்ததியினருக்கு நஞ்சற்ற ஆரோக்கியமான தன்னிறைவான சூழலை நாங்கள் உருவாக்கிக் கொடுப்போம்.’
எங்களின் அறிவில் எங்களின் திறனில்
தங்கி நிற்போம் நாங்கள்
எங்களின் நிலத்தில் எங்களின் விதைப்பில்
விளைவித்தே வாழ்வோம்
கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறைகளை
நீக்கி எழுந்திடுவோம்
சூழலிணைந்து வாழும் வழிகளை
மீளவும் ஆக்கிடுவோம் (பாடல்: சி.ஜெயசங்கர்,மூன்றாவது கண்)
நிறோசினிதேவி.க
சமதை பெண்நிலைவாதக் குழு