உலகம்

ஆப்கானிஸ்தானில் தேசிய தொலைக்காட்சி – வானொலி நிலையத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் – தீவிரவாதிகள் உட்பட 6 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் தேசிய  தொலைக்காட்சி மற்றும் வானொலி  நிலையத்திற்குள் உட்புகுந்த தீவரவாதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில இன்று காலை முதல் இடம்பெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் உட்பட 6 பேர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 4 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் எனவும்  தீவிரவாதிகள் தாக்கியதில் பாதுகாவலர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும் குறித்த பகுதியில்  ஐ.எஸ். அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருவதனால்   அவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply