175
புதிய அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் அமைச்சுப் பதவிகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, துறைமுக அமைச்சு, ஊடக அமைச்சு உள்ளிட்ட சில முக்கிய அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த அமைச்சுக்களின் கீழ் வரும் துறைகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் எதிர்வரும் ஐந்து நாட்களில் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்கப்பட உள்ளது.
Spread the love