189
கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினரால் புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட உபகரணங்களின் மற்றும் கருவிகளின் கண்காட்சி 2017 இடம்பெற்றுள்ளது.
இரணைமடு தாமரைத் தடாகம் மண்டபத்தில் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 2017 ஆம் ஆண்டு படையினரால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு சாதனங்கள், மற்றும் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு அவை தொடர்பில் விளக்கங்களும் அளிக்கப்பட்டது.
புதிய தொழிநுட்பத்துடன் பெருமளவுக்கு கழிவுப்பொருட்களை மூலப்பொருட்களாக கொண்டு இலகுவாக வேலைகளை செய்யக் கூடிய பல புதிய கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.இதனை பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் படையினர் உள்ளிட்ட பலர் பார்வையிட்;டு வருகின்றனர்.
Spread the love