Home உலகம்பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற தாக்குதலில் பலர் பலி

பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற தாக்குதலில் பலர் பலி

by admin


பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸின் தலைநகர் மனிலாவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கசினோ சூதாட்ட மையம் மற்றும் ஹோட்டல் ஒன்றினை இலக்கு வைத்து  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த 34 பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் இவ்வாறு பலர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் பின்னர் தமக்கு தாமே துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். தாக்குதலில் காயமடைந்த 50க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More