174
எதியோப்பியாவில் இணையத் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் எதிர்வரும் 8ம் திகதி வரையிலேனும் நாடு தழுவிய ரீதியில் இணையத் தொடர்புகள் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. உயர் நிலைப்பள்ளி பரீட்சை வினாத்தாள்கள் சமூக ஊடக வலையமைப்பில் பிரசூரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டிலும் இவ்வாறு பரீட்சை வினாத்தாள்கள் இணையத்தின் ஊடாக பிரசூரிக்கப்பட்டு பெரும் மோசடி இடம்பெற்றிருந்தது. பல்கலைக்கழங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் இணைந்து கொள்வதற்காக மாணவர்களை தெரிவு செய்யும் பரீட்சையே நடைபெறவுள்ளது.
Spread the love