155
இயற்கை அனர்த்தம் காரணமாக மூடப்பட்ட தெற்குப் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் இயங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற போது கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இயற்கை அனர்த்தம் காரணமாக பல பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Spread the love