148
திருகோணமலை துறைமுக காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் பள்ளிவாசலுக்கு உள்ளேயிருந்த தரைவிரிப்புகள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதியில் எரிபொருள் நிரப்பப்பட்ட போத்தல் ஒன்று காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த பள்ளிவாசலில் திருத்தவேலைகள் இடம்பெற்று வருவதனால் அருகில் தற்காலிகமாக தொழுகை நடத்தி வந்த பள்ளிவாசல் கட்டடத்தின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love