அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் உயிர்க்காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து பாராளுமன்றில் நடைபெற்ற விவாத்தில் பங்கேற்ற ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்து நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் சிரத்தை காட்டியதாகக் குறிப்பிட்டுள்ள அவர் எனினும், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
சொத்துக்களை பாதுகாப்பதனை விடவும் மக்களின் உயிர்களை பாதுகாப்பதே முதன்மை நோக்கமாக அமைந்திருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் பிரதான ஆறுகளிலிருந்து கடலுக்கு நீர் செல்லக்கூடிய வழிமுறைகளில் ஓர் சீரானதன்மை கிடையாது எனவும் பாதிக்கப்பட்ட மாவட்டச் செயலகங்களில் ஒரு படகு கூட மக்களை மீட்பதற்கு இருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.