இலங்கை

ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்குவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை


பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்குவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். அடைக்கலம் வழங்குவோர் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஞானசார தேரரை கைது செய்ய சில காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் எப்படியாவது அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஞானசார தேரர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அருகாமையில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply