உலகம்

குப்பைகளை சேகரிக்கும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தப் போவதில்லை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

குப்பைகளை சேகரிக்கும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தப் போவதில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். குப்பைகளை அகற்றும் செயன்முறைகளில் படையினர் உதவி வழங்குவார்கள் என்ற போதிலும், குப்பைகளை சேகரிக்க ஈடுபடுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகளவில் குப்பைகள் சேரும் இடங்கள் தொடர்படையினர் பிரதேச சபைகளுக்கு அறிவிப்பார்கள் எனவும் கொழும்பு நகரில் இதற்காக இராணுவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும்அவர்  தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் குப்பைகளை போடுவோரை கைது செய்ய காவல்துறைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply