186
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
இந்தோனேசியாவில் நான்கு வெளிநாட்டுக் கைதிகள் தப்பியோடியுள்ளனர். இந்தோனேசியாவின் பாலித் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
சிறைச்சாலையிலிருந்து சுரங்கமொன்றை தோண்டி கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு தப்பியோடிய கைதிகளை கைது செய்யும் முயற்சியில் பாலி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 39 அடி நீளமான சுரங்கமொன்றை உருவாக்கி கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தியா, அவுஸ்திரேலியா, மலேசியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
Spread the love