இலங்கை

வடமாகாண பேரிணையம் மீது கிளிநொச்சி பனை தென்னைவள கூட்டுறவுச்சங்கம் சுமத்திய குற்றம் உண்மைக்கு புறம்பானது :

 
வடமாகாண ப.தெ.வ.அ.கூ.நிறுவனங்களின் பேரிணையத்தினால் நடைமுறைப்படுத்திவரும் உறுப்பினர் சார்பான நலத்திட்டங்களை நிறுத்தி திட்டச்சந்தா நிதியினை வழங்கவில்லையென கிளிநொச்சி ப.தெ.வ.அ.கூ.சங்கங்கத்தினால் அனுப்பட்ட செய்தி  ஒன்று 16.06.2017ந் திகதி; ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்;டிருந்தது. இது உண்மைக்கு புறம்பானது என்றும் குறித்த செய்தி தொடர்பில் தங்கள் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படாது வெளியிடப்பட்டுள்ளது எனவும் வடமாகாண ப.தெ.வ.அ.கூ.நிறுவனங்களின் பேரிணையத்தின் தலைவர் சி முத்துமார் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
வடமாகாண ப.தெ.வ.அ.கூ.நிறுவனங்களின் பேரிணையமானது கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய நான்கு மாவட்ட இணையங்களை அங்கத்துவமாகக் கொண்டுள்ளது. இதில் தனி உறுப்பினர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு மன்னார் மாவட்டத்தில் 05 சங்கங்களையும், வவுனியா மாவட்டத்தில் 03சங்கங்களையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 08 சங்கங்களையும், கிளிநொச்சி மாவட்டத்தில் 03 சங்கங்களையும் உள்ளடக்கி மொத்தம் 19 சங்கங்களின் உறுப்பினர்கள், ஊழியர்கள் உட்பட்ட 12000 பேருக்கும்;, அவர்களின்  குடும்ப உறவுகளிற்கும் நலத்திட்டங்களை செய்துவருகின்றது.
சங்கம், இணையம், பேரிணையம் இம் மூன்றும்; ப.தெ.வ.அ.கூ.சங்க உறுப்பினர்களின் சொத்தேயாகும். இதில் தனி உறுப்பினர்கள் சங்கங்களில் அங்கத்துவம் கொண்டிருப்பர், சங்கங்கள் அம்மாவட்ட இணையத்தில் அங்கத்துவம் கொண்டிருப்பர், மாவட்ட இணையங்கள் மாகாண பேரிணையத்தில் அங்கத்துவம் கொண்டிருக்கும் இம் மூன்று நிறுவனமும்  தொழிலாளர்களுக்குரிய சொத்தாயினும் ஒவ்வொன்றும் வௌ;வேறு செய்கடமைகளைக்கொண்டிருக்கும் இதில் உச்ச நிறுவனமான பேரிணையமே இவ்நலத்திட்டசேவைகளைச் செய்கின்றது.
இவ்நலத்திட்டங்களிற்கான சந்தாநிதியை சங்கம் உறுப்பினர்களிடமிருந்து  நடைமுறை விதியில் குறிப்பிட்டுள்ளபடி அறவீடு செய்து உறுப்பினர்களின் பெயர் உள்ளடக்கிய பட்டியலுடன் ஒவ்வொரு மாதமும் நலத்திட்ட சந்தா நிதியாக பேரிணையத்திற்கு அனுப்பிவைக்கும். ஊழியர்களிற்கும் இவ்வாறானதோர் சந்தா நிதி அனுப்பிவைக்கப்படும். இவ்வாறு நான்கு மாவட்டங்களில் இருந்து கிடைக்கின்ற ஒட்டு மொத்த நிதிகளைவைத்தே நலத்திட்டங்கள் செய்யப்படுகின்றது.
அந்த வகையில் எவ்வாறான சந்தர்ப்பங்களிலும் நலஉரித்துக்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட உறுப்பினர், ஊழியர் கோரிக்கைவிடும்போது அல்லது அவர்கள் இறந்திருப்பின் அவர்களின் சட்டப்படியான பின் உரித்தாளியினால் கோரிக்கை விடும் சந்தர்ப்பங்களிலே இவர்களின் கொடுப்பனவு பற்றி பரிசீலிக்க முடியும். இதை விடுத்து இவ்வாறானவோர் கோரிக்கையினை வேறுயாராலும் விடமுடியாது இதற்கு விதிகளிலும் இடமில்லை. பேரிணைய விதிப்படி தனி உறுப்பினர்களை அங்கத்தவர்களாக கொண்ட சங்கங்களை அங்கத்துவமாக கொண்ட இணையங்கள் பேரிணையத்தில்  அங்கத்துவம் கொண்டிருக்கும். வேண்டின் இணையங்கள் பேரிணையத்தில் இணைய, விலக உபவிதியில் இடமுண்டு. ஆனால் தனி உறுப்பினர் சார்பான நிதி நடவடிக்கையினை கையாளும் அதிகாரம் பேரிணையத்திற்கே பொறுப்பாக்கப்பட்டுள்ளது. அத்தோடு திட்ட நடைமுறை விதிகளின்படி தொடர்ந்து குறிப்பிட்ட சில காலங்களிற்கு சந்தா நிதியினை உறுப்பினர், சங்கம் ஊடாகச் செலுத்தத்தவறின் சம்மந்தப்பட்டவர்களின் நல உரித்துக்களை இடைநிறுத்தவும் விதியில் இடமுண்டு. அந்தவகையில் இவ் அனைத்து நடவடிக்கைகளும் கிளிநொச்சி சங்கத்திற்கும் பொருத்தமானதே.
இந்நிலையில் கிளிநொச்சி சங்கமானது 2015ம் ஆண்டு வைகாசி மாதத்துடன் உறுப்பினர் சார்பில் செலுத்திய சந்தா நிதியினை வழங்காது நிறுத்தியுள்ளது. அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து திட்டச்செயற்பாடுகளிலிருந்து தாம் விலகுவதாகவும் திட்ட சந்தா நிதிகள் முழுவதையும் தமக்கு அனுப்பிவைக்கும்படியுமோர் கோரிக்கையை பேரிணையத்திற்கு விடுத்துள்ளனர். பேரிணைய உபவிதியின்படி இவ்விடயம் பரிசீலிக்க முடியாதென்பதினைக் கருத்தில் கொண்டு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரிற்கு இதுபற்றி தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அவர்களும் உபவிதி, நடைமுறைவிதி எல்லாம் உறுப்பினர்களால் அவர்களுக்காக உருவாக்கப்பட்டவை அவற்றின் கட்டுப்பாடுகள் எச்சந்தர்பத்திலும் யாராலும் மீறப்படல் ஆகாது எனத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி சங்கம் 2474 உறுப்பினர்களையும் 112 பணியாளர்களையும் பேரிணைய நலத் திட்டத்தில் இணைத்து திட்டச்சந்தா நிதியினை செலுத்தியுள்ளனர் ஆனால் பத்திரிகைகளில் 650 உறுப்பினர்களும் 120பணியாளர்கள் எனவும், பேரிணையத்திற்கு செலுத்திய சந்தாநிதி ரூபா:மூன்று கோடிக்கு குறைவானதொகையாக இருந்தும் ரூபா:-மூன்றுகோடி திட்டச்சந்தா செலுத்தப்பட்டதாகவும் பொய்யான முறையில் தகவலைத் தெரிவுத்துள்ளனர். இவ்வாறு பொய்யான தகவலை வெளியிட்ட இவர்கள் உறுப்பினர், ஊழியர்சார்ந்த நலத்திட்ட உதவுதொகை கொடுப்பனவாக பேரிணையத்திட மிருந்து சுமார் ரூபா:- ஒரு கோடி வரை பெற்றிருக்கின்றனர். ஆனால் அவ்விடயம் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
.
பனை தென்னை வளங்களில் உற்பத்தியினை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்குமாக உருவாக்கப்பட்ட இப்பேரிணைய நிர்வாக அமைப்பு ஒரு சிலர் தங்களுடைய விருப்புவெறுப்பிற்காக மாற்றியமைக்க முயல்கின்றனர். இதில்தெளிவாகச் செயல்பட வேண்டியது உறுப்பினர்கள் மட்டுமே இப்பேரிணையமும் ப.தெ.வள தொழிலாளர்களின் சொத்தேயாகும் இதன் முதலாளிகளும் இவர்களே என்பதினையும் கூறிக்கொள்கின்றேன். என வடமாகாண ப.தெ.வ.அ.கூ.நிறுவனங்களின் பேரிணையத்தின் தலைவர் சி முத்துமார் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.