அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியபிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு ஜனாதிபதி; டொனால்டு ட்ரம்பை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல் இந்தப் பேச்சுவாhத்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர் வெள்ளை மாளிகையில் முதல் முறையாக மோடியை சந்திக்கவுள்ள ட்ரம்ப் , மோடியை உண்மையான நண்பர் என்று பாராட்டி உள்ளார்.
அத்துடன் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை வரவேற்க ஆவலுடன் எதிர்ப் பார்த்து காத்திருக்கிறேன் எனவும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.