உலகம்

சீ.என்.என் ஊடகத்திற்கு எதிரான வகையில் அமெரிக்க ஜனாதிபதி வீடியோ வெளியிட்டுள்ளார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உலகின் முதனிலை ஊடகங்களில் ஒன்றான சீ.என்.என் ஊடகத்திற்கு எதிரான வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட்  ரம்ப்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சீ.என்.என். இலச்சினை பொறிக்கப்பட்ட ஓர் ரெஸ்லின் வீரரை, ட்ராம்ப் தாக்குவது போன்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு ரெஸ்லிங் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற வீடியோ காட்சி, தொகுக்கப்பட்டு இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ட்ராம்பிற்கு ஆதரவான இணைய தரப்புக்களினால் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சீ.என்.என். செய்தி சேவை பொய்யான ஓர் செய்தி சேவை என பல தடவைகள் நேரடியாகவே ட்ராம்ப் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் ஊடக அடக்குமுறையாகவே கருதப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply