குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தனது ராஜதந்திர கடவுச்சீட்டை இதுவரையில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உதயங்கவின் ராஜதந்திர கடவுச்சீட்டை ரத்து செய்துள்ளதாகவும் அவ்வாறான ஓர் நிலையில் உதயங்க குறித்த ராஜதந்திர கடவுச்சீட்டை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் டுபாய்க்கு பயணம் செய்த போது அவருடன் உதயங்கவும் இணைந்து கொண்டிருந்தார் என ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.