விளையாட்டு

லயனல் மெஸ்ஸிக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனை அபராதமாக மாற்றம்

உலகின் புகழ் பூத்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான லயனல் மெஸ்ஸிக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனை அபராதமாக மாற்றப்பட்டுள்ளது.

ஆர்ஜன்டீனா கால்பந்து அணியின் தலைவராக விளங்கும்  மெஸ்ஸி பார்சிலோனா கழகத்துக்காகவும் விளையாடி வருகின்றார்.  இந்தநிலையில் மெஸ்ஸி ஸ்பெயினில் வரி ஏய்ப்பு செய்தமை  நிரூபிக்கப்பட்டதால்  அவருக்கு 21 மாத சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனால் அவரது  கால்பந்து விளையாட்டு கேள்விக்குறியாக காணப்பட்டது.
இந்தநிலையில்    பார்சிலோனா அணியும், அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனமும்  தண்டனைக்குப் பதிலாக அபராதம் விதிக்கலாம் என  தெரிவித்த யோசனையை நீதிமன்றம் ஏற்றுள்ளதனால்  அவரது தண்டனைக் காலம் அபராதமாக மாற்றப்பட்டுள்ளது.

மெஸ்ஸி மற்றும் அவரது தந்தை மீது சுமார் 4.1 மில்லியன் யூரோ வரிஏய்ப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply