Home இந்தியாஅருணாச்சல பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 பேர் பலி

அருணாச்சல பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 பேர் பலி

by admin


அருணாச்சல பிரதேசத்தில் இன்று திடீரென   ஏற்பட்ட  மண்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்  கனமழை பெய்து வரும் பாபம் பரே மாவட்டத்தின் லேப்டாப் கிராமத்தில் இன்று பிற்பகல் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.  இதில்  14 பேர் மண்ணில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மண்சரிவு குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர், சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More