விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்கள் மீளவும் அணியில் இடம்பிடிக்கக்கூடிய சாத்தியம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்கள் மீளவும் அணியில் இடம்பிடிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபைக்கும், வீரர்களுக்கும் இடையில் நிலவி வந்த முரண்பாட்டு நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கிறிஸ் கெய்ல், டெரன் பிராவோ, கிரோன் பொலார்ட், சுனில் நரேன், டிவைன் பிராவோ ஆகியோர் இவ்வாறு அணியில் இடம்பிடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் சில வாரங்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் இந்த வீரர்கள் இடம்பிடிக்கக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது. 2019ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply