குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வரட்சி நாட்டின் நெற்செய்கையை பாரியளவில் பாதிக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் நிலவி வரும் வரட்சியினால் நெற் செய்கை அரைவாசியினால் வீழ்ச்சியடையக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரட்சியானது ஒட்டு மொத்த நாட்டுக்கும் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் நெல் அறுவடையில் பாரியளவில் வீழ்ச்சி ஏற்பட்டால் அது அரிசி ஆலைகளை மூடுவதற்கு வழியமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கைக்கு அமைய மல்வத்து ஓயா திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.