Home இந்தியாஅப்துல்கலாமின் மணிமண்டபத்தை காண செல்பவர்களுக்கு கட்டுப்பாடு:-

அப்துல்கலாமின் மணிமண்டபத்தை காண செல்பவர்களுக்கு கட்டுப்பாடு:-

by admin

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை காண செல்லும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை , கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்புதுறை அதிகாரிகள் நேற்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

மணிமண்டபத்தினுள் செல்போன், கேமரா கொண்டு செல்லக்கூடாது எனவும், உள் பகுதியில் யாரும் படம் பிடிக்கக்கூடாது எனவும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது

குறித்த மணிமண்டபத்தில் அப்துல்கலாம் சிலைகள் மற்றும் அவரது பல்வேறு சாதனைகள் அடங்கிய பொருட்கள், அவர் படித்த ஏராளமான புத்தகங்கள் என பல்வேறு தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இதனை காண தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மணிமண்டபத்தில் கலாம் வீணை வாசிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ள சிலை அருகே பகவத்கீதை புத்தகம் மட்டுமே இடம் பெற்று இருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More