குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் ராஜாங்க வெளிவிவகார அமைச்சர் வசந்த சேனாநாயக்க, வியட்நாமுக்கு பயணம்; ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவர் வியட்நாம் பிரதி வெளிவிவகார அமைச்சர் Dang Dinh Quy ஐ சந்தித்துள்ளார்.
இரு தரப்பு வர்த்தக நடவடிக்கைகளை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு உயர்த்துவதற்கு இந்த சந்திப்பின்போது இணங்கப்பட்டுள்ளதுடன் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் இரு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.