இலங்கை

காவல்துறையினருக்கு பயனளிக்கக்கூடிய வகையில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் – பிரதமர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காவல்துறையினருக்கு பயனளிக்கக்கூடிய வகையில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காவல்துறை மற்றும் குற்றவியல் நீதி விசாரணை தொடர்பில் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முப்படையினரைப் போன்று அல்லது காவல்துறையினருக்கு ஆய்வு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர் பல்கலைக்கழகமொன்று இன்மையே இதற்கான காரணம் என   சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களம், சட்டத்தரணிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், குடிவரவு குடியகழ்வத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் இந்தப் பல்கலைக்கழகத்திற்குள் உள்வாங்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply