178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விசேட நீதிமன்றமொன்றை அமைப்பதற்கு அரசியல் சாசனத்தில் இடமில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த விசேட நீதிமன்றமொன்றை அமைக்கப்பட வேண்டுமேன அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளது.
எனினும், இவ்வாறு விசேட நீதிமன்றமொன்றை அமைப்பதற்கு அரசியல் சாசனத்தில் இடமில்லை என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் ட்ரயல் அட் பார் முறையில் இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
1 comment
கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பது, மக்கள் கோரிக்கை மட்டுமல்ல, மாறாக அது உங்களின் தேர்தல் வாக்குறுதியாகவுமுள்ளது! மக்களுக்குத் தெரியாத சட்டம் குறித்துப் பேசிக் குறுக்கு வழியில் தப்பிக்க நினைப்பதை விடுத்து, மக்களின் நியாயமான கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் வழிமுறையைக் கூறுங்கள்! வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லித் தப்பிக்க முயலவேண்டாம்!