குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத சுமார் 200 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போரளிகள் உள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த முன்னாள் போராளிகள் அண்மைய தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் 12190 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாகவும் இதில் 1963 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு காரணங்களுக்காக சுமார் 200 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படாமல் இருக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹாவா குழுவுடன் முன்னாள் போராளிகளுக்கு தொடர்பு கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கில் ஏதேனும் சிறு சம்பவம் இடமபெற்றால் அதனை பெரிதுபடுத்துவதாகவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இதனை விடவும் மோசமான சம்பவங்கள் இடம்பெற்றாலும் அது குறித்து பேசப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.