Home இந்தியா தாஜ்மகாலை அழிக்கப் போகிறீர்களா என உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது:-

தாஜ்மகாலை அழிக்கப் போகிறீர்களா என உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது:-

by admin

தாஜ்மகாலை சுற்றி உள்ள மரங்களை வெட்ட அனுமதி கோரிய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு தாஜ்மகாலை அழிக்கப் போகிறீர்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

உலக அதிசயமாக திகழ்ந்து வருகின்ற தாஜ்மகாலை யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமாக தாஜ்மகாலை அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் நிபுணர் எம்.சி.மேத்தா என்பவர், காற்று மாசு மற்றும் மரங்கள் அழிப்பில் இருந்து தாஜ்மகாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவின் அடிப்படையில், தாஜ்மகாலை சுற்றி உள்ள வளர்ச்சி பணிகளை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகின்ற நிலையில் , உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இருந்து டெல்லி வரையிலான 80 கி.மீ. தூரத்துக்கு கூடுதல் புகையிரத பாதை அமைக்க திட்ட மிட்டுள்ள இந்திய மத்திய அரசு தாஜ்மகாலை ஒட்டி செல்லும் இப்பாதையில், தாஜ்மகாலை சுற்றி உள்ள 450 மரங்களை வெட்ட அனுமதிக்கக்கோரியிருந்த நிலைNயிலேயே உச்சநீதிமன்றம் இவ்வாறு கோரியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More