Home விளையாட்டுபார்சிலோனா கழகம் மற்றுமொரு வீரரை கூடுதல் விலைக்கு வாங்கியுள்ளது

பார்சிலோனா கழகம் மற்றுமொரு வீரரை கூடுதல் விலைக்கு வாங்கியுள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பார்சிலோனா கழகம் மற்றுமொரு வீரரை கூடுதல் விலைக்கு  வாங்கியுள்ளது. பிரான்ஸ் தேசிய அணியின் வீரரும் போர்சியா டோர்ட்மண்ட் (Borussia Dortmund  ) கழக வீரருமான ஓஸ்மானே  டெம்பெல்லா ( Ousmane Dembele  ) வே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளார்.

கழகங்களுக்கு இடையிலான பரிமாற்ற அடிப்படையில் ஓஸ்மானே    135.5 மில்லியன் பவுண்ட்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளார். கால்பந்தாட்ட கழக வரலாற்றில் பிரபல வீரர் நெய்மருக்கு வழங்கப்பட்ட பரிமாற்றத் தொகைக்கு அடுத்தபடியாக ஓஸ்மானேக்கே அதிகளவு தொகை வழங்கப்பட்டுள்ளது.

பார்சிலோனா போன்ற பிரபல்யமான கழகமொன்றை பிரதிநிதித்துவம் செய்ய கிட்டியமை மகிழ்ச்சி  அளிப்பதாக ஓஸ்மானே    தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த வீரர்கள் இந்த அணியில் அங்கம் வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More