பகிடிவதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தை திரையரங்குகளில் ஒளிபரப்புவதோடு, தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற தமிழக கல்லூரிகளில் பகிடிவதையை தடுப்பது தொடர்பாக மாநில அளவிலான பகிடிவதை தடுப்பு கண்காணிப்புக் குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பகிடிவதை ஒழிக்கப்பட்டு முதலாமாண்டு மாணவர்களுக்கு தகுந்த சூழல் நிலவுகிறது எனத் தெரிவித்த அவர் பகிடிவதை இல்லாத நிலையை தொடர்ந்து பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட அளவில் பகிடிவதை தடுப்புக் குழு கூட்டத்தை நடத்த வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், உள்ளிடொரும் கலந்து கொண்டனர்.