அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அவர் சிறை செல்ல நேர்ந்ததால் டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்து கடந்த 12ம் திகதி அதிமுக பொதுக்குழுவை கூட்டி அதில் சசிகலாவை தற்காலிக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவது எனவும் தினகரன் நியமனம் செல்லாது என்பன உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையிலேயே அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.
அதிமுக சட்ட விதிகளுக்கு முரணாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.