குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெலிக்கடை சிறைச்சாலையின் சிறைச்சாலை மருத்துவர் நிர்மலி தேநுவர இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். குறித்த மருத்துவரை இடமாற்றம் செய்யுமாறு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவர், முக்கிய பிரபுக்களுக்கு விசேட சலுகைகளை வழங்கி வருவதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார். கைதிகளுக்கு விசேட சலுகை வழங்கிய காரணத்தினால் இதற்கு முன்னர் கடமையாற்றிய மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ள ஹிருனிகா பிரேமசந்திர குறிப்பாக சில் ஆடை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்களான லலித் வீரதுங்க மற்றும் அனுச பெல்பிட்ட ஆகியோருக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலை வைத்தியசாலை மருத்துவரை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை
Sep 17, 2017 @ 03:05
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிறைச்சாலை வைத்தியசாலை மருத்துவரை இடமாற்றம் செய்யுமாறு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர கோரிக்கை விடுத்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவர், முக்கிய பிரபுக்களுக்கு விசேட சலுகைகளை வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே, சிறைச்சாலை மருத்துவரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு ஹிருனிகா, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் கோரியுள்ளார். கைதிகளுக்கு விசேட சலுகை வழங்கிய காரணத்தினால் இதற்கு முன்னர் கடமையாற்றிய மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக சில் ஆடை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்களான லலித் வீரதுங்க மற்றும் அனுச பெல்பிட்ட ஆகியோருக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.