Home விளையாட்டுடியான்ஜின் ஓபன் போட்டித் தொடரில் சரபோவா காலிறுதிக்கு தகுதி

டியான்ஜின் ஓபன் போட்டித் தொடரில் சரபோவா காலிறுதிக்கு தகுதி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரபல டென்னிஸ் வீராங்கனை மாரியா சரபோவா, டியான்ஜின் ஓபன் டென்னிஸ்( Tianjin Open tennis )  போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளார். சரபோவா உலக டென்னிஸ் தர வரிசையில் கடந்த காலங்களில் முதனிலை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரபோவா, போலந்தின் மக்டா லினெட் ( Magda Linette ) வை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளார்.

7-5 மற்றும் 6-3 என்ற செற் கணக்கில் சரபோவா, மக்டா லினெட்டை வீழ்த்தியுள்ளார். கடந்த காலங்களில் டென்னிஸ் தர வரிசையில் முதனிலை வ கித்து வந்த சரபோவா தற்போது 86ம் நிலையை தக்க வைத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பில் பதினைந்து மாத கால தடையின் பின்னர் சரபோவா மீளவும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More