198
குளோபல் தமிழ் செய்தியாளர்
கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கில் முழுமையான கதவடைப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. இந்த நிலையில் பூரண ஹர்த்தால் காரணமாக கிளிநொச்சி முடங்கிக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
கிளிநொச்சியில் சந்தை மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக நேற்றைய தினம் கிளிநொச்சி வர்த்தகம் சங்கம் அறிவித்திருந்தது.
இதேவேளை, கிளிநொச்சியின் நகரப் பாடசாலைகள் உள்ளடங்களாக பாடசாலைகள் அனைத்தும் இன்று செயலிழந்தன. அத்துடன் அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என்பனவும் இன்று இயங்கவில்லை. இதேவேளை கிளிநொச்சியுடனான போக்குவரத்தும் இடம்பெறவில்லை.
Spread the love