174
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து இரண்டு பேர் நேற்று மாலை முதல் நீக்கப்பட்டுள்ளனர். மஹிந்தானந்த அளுத்கமகே, நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும், குமார வெல்கம மத்துகம தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மத்திய மாகாண சபை உறுப்பினர் எச். ஏ. ரணசிங்க நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமித்ர அபயவீர மத்துகம தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love