158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதனால் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை மூட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Spread the love