குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவித்துள்ளார். பெற்றோலை சி;க்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் கோரியுள்ளார். பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் இருக்கும் எரிபொருள் முடிவடைந்து செல்வதாக பெற்றோலிய வளக் கூட்டுத்தாபன உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முத்துராஜவல பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் களஞ்சியசாலையின் எரிபொருள் கையிருப்பு தீர்ந்து போய்விட்டதாகவும், கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலையில் மட்டுமே எரிபொருள் எஞ்சியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த எரிபொருளும் எதிர்வரும் மூன்று நாட்களுக்கே போதுமானதாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 9ம் திகதியே எரிபொருள் கப்பல் இலங்கையை வந்தடையும் எனவும், 10ம் திகதியே விநியோகம் செய்யப்பட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது