குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரஜாவுரிமை குறித்து உறுதி செய்து கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெபரல் என்னும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாட்டில் பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்க தகுதியற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை குடியுரிமையைக் கொண்டிருந்த கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கைப் பாராளுமன்றில் வேறும் உறுப்பினர்கள் எவரேனும் இவ்வாறு இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளனரா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.