Home இலங்கைகிளிநொச்சியில் குழந்தைகளுக்கும், கர்ப்பவதிகளுக்கும் 2 நாட்களில் காலாவதியாகும் திரிபோசா :

கிளிநொச்சியில் குழந்தைகளுக்கும், கர்ப்பவதிகளுக்கும் 2 நாட்களில் காலாவதியாகும் திரிபோசா :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் கர்ப்பவதி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள திரிபோசா 2 நாட்களில் காலாவதியாகும் நிலையில வழங்கப்பட்டுள்ளதென விசனம் வெளியிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியின் உருத்திரபுரம், சிவநகா்,உதயநகா் போன்ற பல கிராமங்களிலேயே இவ்வாறு காலாவதியாகவுள்ள நிலையில் உள்ள திரிபோசா வழங்கப்பட்டுள்ளது.

13-11-2017 அன்று வழங்கப்பட்டுள்ள திரிபோசா பைகற்றுகள் 15-11-2017 அன்று காலாவதியாகும் திகதியில் காணப்படுகின்றன. இது குறித்து சில பெற்றோh்கள் மற்றும் கர்ப்பவதிகள் கேள்வி எழுப்பிய போதும் அவற்றை கவனத்தில் எடுக்காக உத்தியோகத்தர்கள் இவை மட்டுமே இருப்பதாகவும் விரும்பினால் பெற்றுக்கொள்ளுங்கள் இல்லையெனில் விட்டுச் செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர்.

வறுமை நிலையில் உள்ள பல குடும்பங்கள் வேறு வழியின்றி குறித்த திரிபோசாவை பெற்றுச் சென்றுள்ளனா். இந்த திரிபோசா பைகற்றுகள் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு வைத்து பயன்படுத்தப்படுகின்ற நிலையில் 2 நாட்களில் காலாவதியாகும் நிலையில் காணப்படுவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More