174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவினால் உதவிகள் வழங்கப்பட்டு வரும் ஊடகங்கள் மீது ரஸ்யா குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கி வரும் செய்தி ஊடகங்களை, ரஸ்யா பட்டியலிட உள்ளது. வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் என்ற அடிப்படையில் இந்த ஊடகங்கள் பட்டியலிடப்பட உள்ளன.
செய்தி ஊடகங்களின் நிதி மூலங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ரஸ்யா கோர உள்ளது. இதனை ஓர் சட்டமாக இயற்றி பாராளுமன்றில் இதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love