காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் சில பகுதிகளுக்கு இன்று மாலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெலிபிட்டிமோதர, மஹஹபுகல, உக்வத்த, கிந்தோட்டை மேற்கு மற்றும் கிழக்கு, பியந்திகம, குருந்துவத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
காலி கிந்தோட்டைப் பிரதேசத்தில் நேற்று இரவு ஏற்பட்டிருந்த அமைதியின்மையை அடுத்தே இன்றைய தினமும் இந்த ஊடரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. கிந்தோட்டை பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு சென்ற வெளியிடத்தை சேர்ந்த குழுவினரால் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்களால் அந்த பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளும் வியாபார நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் கிந்தோட்டை பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.